அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கெவின் மெக்கலின் பதவி விலகினார்…

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கெவின் மெக்கலின் பதவி விலகினார்…

அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கெவின் மேக்கலீனன் பதவி விலகுவதாகவும், அந்தப் பொறுப்புக்கு புதிய தலைவர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என்றும் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் 4வது நபர் மேக்கலீனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக கெவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார்.

சட்ட விரோத குடியேறிகள் தொடர்பாக டிரம்புடன் இணைந்து பாராட்டுக்களைப் பெற்ற கெவினுக்கும், அதிபருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கெவின் இப்போது, அரசாங்கத்தில் பல ஆண்டுகள் கழித்து, தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்து தனியார் துறைக்கு செல்ல விரும்புகிறார்” என்று டிரம்ப் தனது ட்விட்டரில் தெரிவித்தார். மேலும் “தான் அடுத்த வாரம் புதிய அமைச்சரை அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.