தலவாக்கலையில் அலைமோதிய மக்கள் கூட்டம் – இ.தொ.க முக்கிய புள்ளிகளும் சஜித்திடம் தாவல்!

தலவாக்கலையில் அலைமோதிய மக்கள் கூட்டம் – இ.தொ.க முக்கிய புள்ளிகளும் சஜித்திடம் தாவல்!

ஜனாதிபதிவேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவுதெரிவித்து தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி செய்த பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் மக்கள் வெள்ளம் அலைமோதியது.

இதில் வேட்பாளர்சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர்மனோ கணேசன், பிரதித் தலைவர்கள்அமைச்சர் பி. திகாம்பரம், அமைச்சர்வீ.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.திலகராஜ், ஏ.அரவிந்தகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணிபொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்தியமாகா சபை முன்னாள் உறுப்பினர்கள்,எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம்.ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர்.ராஜாராம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ.புத்திரசிகாமணிஉட்பட நகர சபை, பிரதேசசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களானஇலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்தஅற்புதராஜ், இ.தொ.கா.வைச் சேர்ந்த ஜெசிந்தா, என்டன்ஆகிய மூவரும் தமிழ் முற்போக்குகூட்டணியோடு இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.