அதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..!

அதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..!

இந்திய அரசிடம் இருந்து ஏதாவது சலுகைகள் கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது வோடபோன் ஐடியா. ஆனால் அப்படி எல்லாம் எந்த சலுகையையும் அளிக்க முடியாது என்று, கண்ணாடி பாட்டிலை போட்டு உடைத்தாற் போல் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு கடந்த வெள்ளிக்கிழமை இருந்தது.

ஏனெனில் உச்ச நீதிமன்றம் முன்னரே கூறியபடி, கடந்த ஜனவரி 23ம் தேதிக்குள் ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இணங்காததற்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்களை கடுமையாக கண்டித்ததோடு, செயல்படுத்தாத அதிகாரிகளையும் கண்டித்தது உச்ச நீதிமன்றம்.

மேலும் வரும் மார்ச் 17-க்குள் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை டெபாசிட் செய்யாததற்கு காரணத்தையும் விளக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

கொரோனாவால் ஸ்தம்பித்து போன சீனா.. இந்தியாவுக்கு வாய்ப்புகளை வாரி வழங்குமா..!

குழும உறுப்பினர்கள் சந்திப்பு

குழும உறுப்பினர்கள் சந்திப்பு

இதனை எதிர்பாராத வோடபோன் இருந்த கொஞ்ச நஞ்சம் நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே அரசு தரப்பில் இருந்து போதிய உதவி இல்லாவிட்டால் நிறுவனத்தை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று வோடபோன் ஐடியா தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று முறைசாரா முறையில் இந்த நிறுவனத்தின் குழும உறுப்பினர்கள் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வோடபோன் எவ்வளவு செலுத்த வேண்டும்?

வோடபோன் எவ்வளவு செலுத்த வேண்டும்?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையான 1.47 லட்சம் கோடியை செலுத்துமாறும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே கூறியது. இது அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அலைகற்றை, பயன்பாட்டிற்கான கட்டணம், ஈவுத் தொகை, மற்று சொத்து வருமானம் உள்ளிட்டவையை சரிகட்டப்பட்ட நிகர வருவாயாக கணக்கிடப்பட்டு, அதில் குறிப்பிட்ட தொகையை ஆண்டு உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இதில் குறிப்பாக வோடபோன் ஐடியா 40,000 கோடி ரூபாய் நிலுவையை செலுத்த வேண்டி இருப்பதாகவும் கூறப்பட்டது.

திவால்நிலையா அல்லது மறுமுதலீடா?
 

திவால்நிலையா அல்லது மறுமுதலீடா?

இந்த நிலையில் வோடபோனின் நிலை பற்றி நேரடியாக அறிந்த இரண்டு நபர்களின் கூற்றுப்படி, வோடபோன் நிறுவனத்தை திவால் நிலைக்குத் தாக்கல் செய்தல் மற்றும் ஏஜிஆர் நிலுவைத் தொகையை ஓரளவு செலுத்துவதற்கு நிதி திரட்டுவதற்கான விருப்பங்களை வோடபோன் குழும வாரியம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 ஏர்டெல் கணிசமான தொகையை செலுத்த ஒப்புதல்

ஏர்டெல் கணிசமான தொகையை செலுத்த ஒப்புதல்

இது பிப்ரவரி 20க்குள் பார்தி ஏர்டெல் நிறுவனம் 10,000 கோடி ரூபாய் செலுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குழுமம் இப்படி ஒரு முறைசாரா கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் இது குறித்து அறிந்த மற்றொரு அதிகாரி, திவால் நிலைக்கு செல்வது மிக தெளிவான விருப்பம் என்றாலும், ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்த நிதி திரட்ட ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்று இந்த நிறுவனம் பரிசீலிக்க ஆர்வமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நிவாரணம் இல்லை

நிவாரணம் இல்லை

இது குறித்து அக்யூட் ரேட்டிங்ஸ் அன்ட் ரிசர்ச்சின் மதிப்பீடுகளின் தலைவர் சுமன் சவுத்ரி கூறுகையில், மார்ச் 17, 2020ம் தேதிக்குள் நிலுவையில் உள்ள ஏஜிஆர் நிலுவையைத் தொகையைத் தீர்க்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் உச்ச நீதிமன்றம் எந்தவொரு நிலுவைத் தொகை பற்றிய நிவாரணத்தை தர முடியாது என்று கூறியதையடுத்து, வோடபோன் ஐடியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது என்று எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை

கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை

கடந்த ஆண்டு டிசம்பரிலேயே ஆதித்தியா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனம் சட்ட ரீதியான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை சுட்டிக்காட்டி, அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏதும் நிவாரணம் வழங்காவிட்டால், கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இது வோடபோனுக்கு வாழ்வா சாவா என்பதை தீர்மானிக்கும் ஒரு போராட்ட களமாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.