‘ஆபரேஷன் நமஸ்தே’ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இந்திய ராணுவம்.. | Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World

‘ஆபரேஷன் நமஸ்தே’ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் இந்திய ராணுவம்.. | Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World

டெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ‘ஆபரேஷன் நமஸ்தே’ என்ற பெயரில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருவதாக ராணுவ தலைமை ஜெனரல் அறிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும்  நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பல தரப்பினர் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் தங்களை ஈடுபடுத்தி வரும் நிலையில், இந்திய ராணுவமும், தன் பங்குக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நடவடிக்கையை, ஆபரேஷன் நமஸ்தே என்று இந்திய ராணுவம்  குறியீடு செய்துள்ளது. ராணுவத்தின் சார்பில்,  இதுவரை நாடு முழுவதும் எட்டு தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை ஏற்படுத்தியுள்ளது என்று  ராணுவ தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த போராட்டத்தில், அரசு மற்றும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவது நமது பொறுப்பு. ஒரு இராணுவத் தலைவராக, எனது சக்தியைப் பொருத்தமாக வைத்திருப்பது எனது கடமை. செயல்பாட்டு காரணங்களால், இராணுவம் அருகிலேயே வாழ வேண்டும் இது நமது கடமை என்றும் கூறி உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்

Tags: ‘ஆபரேஷன் நமஸ்தே’, Indian Army code-names anti-COVID19 operations as Operation Namaste

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.