“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” – சாஹலிடம் கூறிய ரோஹித்!

“வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறிய பிறகு ஐபிஎல் குறித்துப் பேசுவோம்” – சாஹலிடம் கூறிய ரோஹித்!

Coronavirus: Rohit Sharma Tells Yuzvendra Chahal Well Talk About IPL When "Life Gets Back To Normal"

இன்ஸ்டாகிராமில் ரோஹித் ஷர்மாவும், யுஸ்வேந்திர சாஹலும் ஒருவருக்கொருவர் உரையாடினர். © Twitter


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் மூத்த தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா, ஐபிஎல் தொடர் இப்போதைக்குக் காத்திருக்கும் என்று கூறினார். இந்திய அணி வீரரான சாஹலுடனான இன்ஸ்டாகிராம் உடையாடலில், ரோஹித் ஷர்மாவிடம் ஐபிஎல் நிலையைக் குறித்துக் கேட்டார்.

ஏற்கெனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் அந்த ஒத்துவைப்பு நீட்டிக்கப்படலாம். ஏனெனில், வியாழக் கிழமை மாலை வரை 700 பேர் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“நாம் முதலில் நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். இப்போது உள்ள நிலைமை சரியாக வேண்டும், அதன் பிறகு தான் ஐபிஎல் குறித்து யோசிக்க முடியும். முதலில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறட்டும்,” என்று ஐபிஎல் குறித்துக் கேட்ட சாஹலுக்கு ரோஹித் பதிலளித்தார்.

ஏஸ் மும்பை பேட்ஸ்மேன் தனது நகரத்தை இதுபோன்று பார்த்ததில்லை என்று கூறினார், எல்லா சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன என்றார். மேலும், கிரிக்கெட் வீரர்களாக அவர்கள் ஆண்டு முழுவதும் பரபரப்பான கால அட்டவணை காரணமாக குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட மாட்டார்கள் என்றும் கூறினார்.

“மும்பையை நான் இதுவரை இப்படிப் பார்த்ததில்லை,” என்று ரோஹித் ஷர்மா பால்கனியில் இருந்து வெறிசோடிய தெருக்களை சாஹலுக்கு காண்பித்தார்.

“கிரிக்கெட்டர்களாக, நமக்கு குடும்பத்தினருடன் இருக்க நேரம் கிடைப்பதில்லை. பல சுற்றுப்பயணங்கள் மற்றும் கிரிக்கெட் இருக்கிறது. இது அவர்களுடன் இருக்க வேண்டிய நேரம்,” மகள் சமைராவை தோள் வைத்துகொண்டு ரோஹித் ஷர்மா கூறினார். 

கொரோனா வைரஸ் காரணமாக ரத்து செய்யப்பட்ட தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் ஷர்மா ஓய்வளிக்கப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன், நியூசிலாந்து சுற்றுப்பயணம் டீம் இந்தியாவுக்குச் சரியாகப் போகாததால், சாஹலை சிறப்பான ஆட்டத்தைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.

இந்தியா டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது, ஆனால் அடுத்தடுத்த ஒருநாள் தொடரை 3-0 மற்றும் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. 

“நான் நன்றாகப் பந்து வீசினேன். ஆனால், வெற்றி பெறும் விக்கெட்டை எடுக்க முடியவில்லை” என்று சாஹல் கூறினார்.

“நான் 2-3 விக்கெட்டுகள் வீழ்த்துகிறேன், ஆனால் வெற்றி விக்கெட்டுகள் பெற முடிவதில்லை,” என்றார்.

இந்த நாட்களில் சாஹல் தனது தினசரி வழக்கத்தைக் குறித்துக் கூறினார். அவர் அதிகாலை 5 மணிக்குத் தூங்குவதாகவும், பிற்பகல் 2 மணிக்கு எழுந்திருப்பதாகவும் கூறினார்.

“நான் கேம்ஸ் விளையாடுவேன். மதியம் குடும்பத்துடன் நேரம் கழிப்பேன். ஓய்வெடுப்பேன்.. இந்த நாட்களில் இதான் செய்கிறேன்” என்று சாஹல் கூறினார்.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.