என்னுடைய இந்துத்வா உங்களால் சரிபார்க்க தேவையில்லை: கவர்னருக்கு உத்தவ் தாக்கரே பதில்

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியபோது, மகாராஷ்டிரா அரசும் அதை கடைபிடித்தது.
அதன்பின் ஐந்து கட்டங்களாக மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனால் மகாராஷ்ரா அரசு 2-வது அலை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கோவில் தரிசனம் போன்றவற்றிற்கு இன்னும் அனுமதி வழங்காமல் உள்ளது.
இதனால் பல்வேறு வழிகளில் கோரிக்கைகள் விடப்பட்டு வருகின்றன. இறுதியாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர், ‘‘தளர்வுகளை தள்ளிவைக்க ஏதேனும் தெய்வீக முன்னறிவிப்பைப் பெறுகிறீர்களா? அல்லது திடீரென்று மதச்சார்பற்றவர்களாக மாறிவிட்டீர்களா? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’’ என கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த உத்தவ் தாக்கரே ‘‘லாக்டவுனை திடீரென அமல்படுத்தியது சரியானது அல்ல. அதேபோல் ஒரே நேரத்தில் அனைத்திற்கும் தளர்வுகள் அளிப்பது நல்ல விசயம் அல்ல. நான் ஹிந்துத்வாவை பின்பற்றுகிறவன். என்னுடைய இந்துத்வா உங்களால் சர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.