என்ன மொட்டை தாத்தா.. சுட்டிக் குழந்தை ஆஜீத் கூடலாம் சண்டை போடுறீங்க.. கொஞ்சம் கூட சரியில்லையே!

By Mari S

|

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இப்போதான் சண்டை காட்சிகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன.

கடந்த அக்டோபர் 4ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 தொடங்கியது.

16 போட்டியாளர்களுடன் இந்த முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி சில நியூ நார்மல்களுடன் தொடங்கி முதல் வாரத்தை கடந்துள்ளது.

விளையாடும் மொட்டை

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இதுவரை வெளியான எபிசோடுகளில் அதிக அளவில் ஸ்கோர் செய்து செம கேம் பிளானுடன் நம்ம மொட்டை தல சுரேஷ் விளையாடி வருகிறார். ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸ் உடனும் வேண்டுமென்றே சண்டை போட்டு போட்டு புரமோவில் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

ஷிவானியை கார்னர் செய்தார்

ஷிவானியை கார்னர் செய்தார்

ஷிவானியுடன் வந்த முதல் நாளே பாட்டுப் பாட சொல்லி கேட்டு, பின்னர், யாருடனும் மிங்கிள் ஆக மாட்றீங்களே என சனம் ஷெட்டி, சம்யுக்தா உள்ளிட்டோர் டார்கெட் செய்யும் போது, மூஞ்சியை ஏன் அப்படி வச்சிருக்க என முதல் கட்டமாக பிக் பாஸ் தமிழ் 4ல் சண்டையை ஆரம்பித்து வைத்தார் சுரேஷ்.

எதிர்காத்துல எச்சில் உமிழாதே

எதிர்காத்துல எச்சில் உமிழாதே

அதற்கு பிறகு சன் டிவி செய்திவாசிப்பாளரான அனிதா சம்பத்துடன், பேசும் போது எச்சில் தெறிக்கும் என பேசி அவரை கோபப்படுத்தினார். எச்சில் சண்டை பின்னர் எரும மாடு சண்டையாக் மாறி, வயசானவங்களுக்கு வீட்டில் மரியாதை இல்லை என்ற குற்றச்சாட்டுகளுடன் வைரலானது. கமல் பேசும் போது, எதிர்காத்துல எச்சில் உமிழாதே என பாடி சுரேஷுக்கு குட்டு வைத்தார்.

ரவுண்டு கட்டி ஆடுறார்

ரவுண்டு கட்டி ஆடுறார்

பிக் பாஸ் வீட்டில் நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரியோ, நிஷா, வேல்முருகன் என அனைவருடனும் சண்டை போட்டுக் கொண்டு ரவுண்டு கட்டி ஆடி வருகிறார் சுரேஷ் சக்கரவர்த்தி. கடைசியாக செவ்வாய்க்கிழமை எபிசோடில், ஆரம்பத்திலேயே சூப்பர் சிங்கர் ஆஜித்துடன் கூட சண்டைக்கு வந்துவிட்டார்.

ஆர்டர் போடுறாரு

ஆர்டர் போடுறாரு

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை எபிசோடில் பாத்திரம் அடுக்கி வைக்க சொல்லி ஆஜீத்துக்கு ஆர்டர் போட, அப்படியெல்லாம் ஆர்டர் போடாதீங்க என செம அப்செட்டாக வெளியே பல்லைக் கடித்துக் கொண்டு ஆஜீத் சென்றார். பின்னர், மற்ற ஹவுஸ்மேட்ஸ்கள் ஆஜீத்தை சமாதானப்படுத்த, சுரேஷும் ஆஜித்தை வந்து கட்டித் தழுவி மன்னிப்பு கேட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.