கணவன் மனைவி சண்டை! தடுக்க போன திமுக பிரபலம்! – அரிவாள் வெட்டால் மருத்துவமனையில் அனுமதி

சென்னையில் கணவன் மனைவி சண்டையை தடுக்க முயன்ற திமுக செயற்குழு உறுப்பினர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியில் வசித்து வருபவர் திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரன். இவரது வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணுக்கும், அவரின் கணவருக்கும் இடையே சண்டை இருந்து வந்ததாக தெரிகிறது. கே.கே.நகரில் உள்ள தனஞ்செயனின் அலுவலகத்திற்கு வந்த கணவன் – மனைவி இடையே தகராறு எழுந்துள்ளது. இருவரையும் சமரசம் செய்ய தனஞ்செயன் குறுக்கிட்டபோது அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார்.

இதனால் காயமடைந்த தனசேகரனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.