சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விவாதம்| Dinamalar

புதுடில்லி: தனிஷ்க் நகை கடை விளம்பரம் சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது.

விளம்பரம் குறிப்பிடுவது என்னவென்றால் இந்து மருமகளுக்கு, முஸ்லீம் மாமியார் வளைக்காப்பு நடத்துவது. இது தான் அந்த விளம்பரம்.
இந்த விளம்பரம் லவ் ஜிஹாத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்ததாலும் பாய்காட் தனிஷ்க் என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆனதாலும் விளம்பரத்தை யூடியூப்பில் இருந்து தனிஷ்க் நிறுவனம் நீக்கிவிட்டது.
இந்நிலையில், இந்து-முஸ்லீம் ஒற்றுமையை விளக்கும் வகையிலான விளம்பரத்தை நீக்கியதற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஹமீனா ஷாஃபிக், விளம்பரத்திற்கு ஆதரவாக “அழகான தனிஷ்க் விளம்பரங்களை கவனிக்க வைத்ததற்கு நன்றி! என கூறினார்.
நடிகை கங்கனா ரனாவத் பல மட்டங்களில் விளம்பரம் தவறாக உள்ளது இது ‘லவ் ஜிஹாத்’ மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது என்று கூறினார்.


latest tamil news

கடந்த வாரம் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் சேலை அணிந்த கர்ப்பிணிப் பெண் அவரது மாமியாரால் வளைகாப்பு விழாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.
வீடியோவில், கர்ப்பிணிப் பெண் மாமியாரிடம் கேட்கிறார்: “ஆனால் ஏன் இந்த விழா உங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை …”.
மாமியார் பதிலளிக்கிறார்: “ஒவ்வொரு வீட்டிலும் மகள்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒரு பாரம்பரியம் அல்லவா?” என்கிறார்
வீடியோவின் விளக்கம்: “பெண் ஒருவர் தனது சொந்தக் குழந்தையைப் போலவே தன்னை நேசிக்கும் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். அவருக்காக மட்டுமே, அவர்கள் வழக்கமாகச் செய்யாத ஒரு கலாசாரத்தை கொண்டாட அவர்கள் வெளியே செல்கிறார்கள். மரபுகள், கலாச்சாரங்கள் என்ற இரண்டு வெவ்வேறு மதங்களின் அழகான சங்கமம் என கூறப்பட்டு உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.