திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் ஐ.டி பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருமுல்லைவாயல்: திருமணத்திற்கு விருப்பம் இல்லாததால் ஐ.டி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் 9வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லலித்ஷா(25). சிறுச்சேரியில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். ஆனால், அவருக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லலித்ஷாவுக்கும், பெற்றோருக்கும் இடையே திருமணம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த லலித்ஷா படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லலித்ஷா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(40). காய்கறி கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதமாக ஊரடங்கில் கமலகண்ணனுக்கு வியாபாரம் சரியில்லை. எனவே குடும்ப செலவிற்கு பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இதனால் கடன் நெருக்கடியால் கடந்த சில தினங்களாக மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் கமலக்கண்ணன் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கமலக்கண்ணன் இறந்ததாக தெரிவித்தனர். இவருக்கு தீபா என்ற மனைவி ஒரு மகன், மகள் உள்ளனர். புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.