நானே பிரதமர் என்று மன்னரிடம் நாற்காலிக்காக தர்மயுத்தம் நடத்தும் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர்

நானே பிரதமர் என்று மன்னரிடம் நாற்காலிக்காக தர்மயுத்தம் நடத்தும் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர்

மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினை வெளியேற்றுவதற்கான “வலுவான மற்றும் உறுதியான” பாராளுமன்ற ஆதரவு குறித்த ஆவணங்களை மன்னரிடம் வழங்கியதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுகிறார். 222 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வர் கூறினார்.

file photo

மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினை வெளியேற்றுவதற்கான “வலுவான மற்றும் உறுதியான” பாராளுமன்ற ஆதரவு குறித்த ஆவணங்களை மன்னரிடம் வழங்கியதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுகிறார். 222 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வர் கூறினார்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தால் ஏற்கனவே சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் மலேசியா, தொற்றுநோயின் பக்கவிளைவாக எழுச்சியை எதிர்கொள்வதால் அதிகாரப் போராட்டம் வலுக்கிறது.

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கடந்த மாதம் கூறிய அன்வர், பின்னர் செவ்வாய்க்கிழமை காலையில் மலேசிய மன்னரை சந்தித்தார்.

மலேசியாவில் அரசருக்கு பெயரளவில் தான் அதிகாரம் உண்டு என்றாலும், அவர் பிரதமரை நியமிக்க முடியும். அதுமட்டுமல்ல, அவர் தனது மேற்பார்வையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடும் வாய்ப்புகளே பிரகாசமாக தென்படுகிறது. பாராளுமன்றத்தை கலைத்து, பிரதமரின் ஆலோசனையின் பேரில் தேர்தல்களை நடத்தும்படி அவர் பரிந்துரைக்கவும் செய்யலாம்.  

கடந்த மார்ச் மாதத்தில், பிரதமர் மகாதீர் மொஹமத் திடீரென்று பதவியை ராஜினாமா செய்த பின்னர், மலேசிய மன்னர் முஹைதீனை பிரதமராக நியமித்தார், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக முஹைதீன் சொல்வதை தான் நம்புவதாகக் கூறினார்.

இப்போது, எதிர்கட்சித் தலைவராக இருக்கும் அன்வர், பிரதமரானால், அவர் இந்த ஆண்டின் மூன்றாவது மலேசியா பிரதமராக இருப்பார்.

Read Also | நடுக்கடலில் நின்று அடம் பிடிக்கும் சீனா: கடுப்பாகி கண்டிக்கும் ஜப்பான்

ஆனால், இதுவரை எந்தவொரு பெரிய கட்சியும் தெளிவான ஆதரவை அறிவிக்கவில்லை என்பதால் அன்வாரின் கோரிக்கை குறித்த சந்தேகம் ஏழுகிறது.

மலேசிய பிரதமாக ஏழு மாதங்கள் ஆட்சி செய்துள்ள முஹைதீன், மிகச் சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளார், அதாவது அவர் நூழிலையில் தப்பிப்பிழைத்துள்ளார். அன்வர் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறுவதை நிராகரித்த முஹைதீன், அரசியலமைப்புச் செயற்பாட்டின் மூலம் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்படி சவால் விடுத்திருந்தார்.

முஹைதீனுக்கு தங்கள் ஆதரவு நீடிப்பதாக பெரிகாடன் நேஷனல் கூட்டணியின் (Perikatan Nasional coalition) தலைவர்கள் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இந்த நிலையில் மலேசியாவில் பிரதமர் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளதா இல்லையா என்பது ஆடு புலி ஆட்டமாகவே உள்ளது.

Read Also | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.