மிருகக்காட்சி சாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி கொடுக்கக்கூடாது! அசாம் மாநில பாஜக தலைவர் எதிர்ப்பு…

கவுகாத்தி: மாநிலத்தில் உள்ள  மிருகக்காட்சிசாலையில் புலிகளுக்கு மாட்டிறைச்சி  போடக்கூடாது என்று அசாம் பாஜக தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். மிருகக்காட்சி சாலையில் உள்ள உபரி சாம்பார் வகை மான்களை அவைகளுக்கு உணவாக வழங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளளார். ஆனால்,  சாம்பார் இன மான் இந்திய சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருவதால், அதை உணவாக வழங்க முடியாது என மிருககாட்சி சாலை தெரிவித்து உள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சி தொடர்பான தாக்குதல்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. அதுபோல அசாம் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாட்டிறைச்சி வைத்திருந்ததாக இஸ்லாமிய முதியவர் ஒருவர் பசு பாதுகாவலர் என்ற கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அசாம் மாநிலபாஜக தலைவர் சத்ய ரஞ்சன் போரா, மிருககாட்சி சாலையிலும் உள்ள புலி போன்ற விலங்குகளுக்கு மாட்டிறைச்சி வழங்கக்கூடாது என போர்க்கொடி தூக்கி உள்ளார். போரா தலைமையிலான  கும்பல்,  மாட்டிறைச்சி எதிர்ப்பு ஆர்வலர்கள் எனக் கூறி – புலிகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்தும்,  கவுகாத்தி மிருகக்காட்சிசாலைக்கு வந்த வாகனங்களை , மிருககாட்சி சாலையின் பிரதான வாயிலைத் தடுக்க முயன்றனர்.  அதைத்தொடர்ந்து, மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய போரா,  “இந்து சமுதாயத்தில் நாங்கள் பசுவைப் பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், ஆனால் இது மிருகக்காட்சிசாலையில்,  உள்ள விலங்குகளுக்கான  உணவிற்கான பிரதான உணவாகவும், அரசாங்க விநியோகத்தின் ஒரு பகுதியாகவும் மாட்டிறைச்சி விளங்கி இருக்கிறது.

எங்கள் ஆட்சேபனை என்னவென்றால் – ஏன் மாட்டிறைச்சியை பரிமாற வேண்டும்? ஏன் மற்ற இறைச்சியை கொடுக்கக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியவர், மிருகக்காட்சி சாலையில் சாம்பார் இன மான்கள் அதிக அளவில் உள்ளன. உபரி மான்களை புலிகளுக்கு இறைச்சியாக வழங்கலாம் என்றும்,   “மிருகக்காட்சிசாலையின் சாம்பார் மான்  தொகை அதிகரிப்பை தடுக்க ஆண் மான்கள், பெண்களை  தனித்தனியாக வைத்திருக்க வேண்டும் (இனப்பெருக்கம் மெதுவாக்க). மாமிச உணவுகளுக்கு உணவளிக்க சாம்பார் மான் இறைச்சி பயன்படுத்தினால் மிருகக்காட்சிசாலையில் தன்னிறைவு அடைய முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனத்துறை மற்றும் மிருககாட்சிசாலை நிர்வாகம்,  வனவிலங்குகளுக்கு மாமிச உணவுகளுக்கான உணவை  கொடுக்கவே மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் பரிந்துரைக்கிறது. சட்டப்படி மிருகக்காட்சிசாலையில் உள்ளே இருக்கும்  விலங்குகளின் இறைச்சியை மாமிச உணவுகளுக்கு கொடுக்க முடியாது. மேலும், சாம்பார் மான் ஒரு காட்டு விலங்கு, நாங்கள் காட்டு விலங்குகளை கொல்ல முடியாது “என்று மிருகக்காட்சிசாலையின் அதிகாரி  தேஜஸ் மரிஸ்வாமி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.