முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் காலமானார்.!

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.
சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வரின் தயார் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பழனிசாமி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிகாரிகள், உறவினர்கள், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தவுசாயம்மாள் உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று காலை 9 மணியளவில் சிலுவம்பாளையத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயார் காலமானதை அடுத்து முதல்வரின் ஆய்வு சுற்றுப்பயணங்கள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி, கன்னியாகுமரி,விருதுநகர் ஆகிய இடங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.