ரூ.1.32 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை : துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான, தங்க கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாடான, துபாயிலிருந்து, ‘பிளை துபாய்’ மற்றும், ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானங்கள் நேற்று முன்தினம் இரவு, சென்னைக்கு வந்தன. அந்த விமானங்களில் வந்த, சென்னையைச் சேர்ந்த இருவர்; ராமநாத புரத்தைச் சேர்ந்த ஒருவர் என, மூன்று நபர்களை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத் துறை அதிகாரி கள் சோதனையிட்டனர். அப்போது, அவர்களது ஆசனவாய்கள் மற்றும் ஆடைகளுக்குள் இருந்து, 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான, 2.880 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட, மூன்று பேரையும் கைது செய்து, சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.