விஜயகாந்த், தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!

சென்னை:
தேமுதிக பொதுசெயலாளர்
விஜயகாந்த்
, நடிகர்
தனுஷ்
வீட்டிற்கு விடுத்த
வெடிகுண்டு மிரட்டல்
விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் ஆகியோர் வீட்டுக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீடு மற்றும் அபிராமபுரத்தில் உள்ள தனுஷ் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

மோப்ப நாய், வெடிகுண்டு தடுப்பு பிரிவு
போலீசார்
இந்த சோதனையை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற நபர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டறிந்துள்ளனர்.

அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை…இதுதான் விஷயம்!

மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ்வர், ஏற்கனவே நடிகர் விஜய், அஜித், ரஜினி வீடுகளுக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.