அசத்தும் தொழில்நுட்பத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி சாதனங்கள் அறிமுகம்.!

ஆப்பிள் நிறுவனம் நேற்று இரவு நடைபெற்ற ஹை ஸ்பீடு நிகழ்வில் புதிய ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி மாடல்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த புதிய ஐபோன் 12 மாடலில் முதல் முறையாக 5ஜி வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சொல்ல வேண்டும்

மேலும் ஐபோன் 12 மாடலில் 6.1-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஐபோன் 12 மினி மாடலில் 5.4-இன்ச் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அதிக உறுதியான டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது.

ழங்கப்பட்டுள்ள 5ஜி

இந்த சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம் ஆனது உலகின் அதிவேக செல்லுலார் இணைய வேகம் வழங்கும் திறன்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேசமயம் 5ஜி வசதி கிடைக்காத சமயங்களில் எல்டிஇ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதி கொண்டுள்ளது.

5ஜி வசதி வழங்க உலகம்

வெளிவந்த தகவலின்படி 5ஜி வசதி வழங்க உலகம் முழுக்க பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் நிறுவனம் பரிசோதனைகளை வெற்றிகரமாக செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனது ஆப்பிள் ஏ14

புதிய ஐபோன் 12 மாடல் ஆனது ஆப்பிள் ஏ14 பயோனிக் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. இந்த பிராசஸர் இதுவரை வெளியான ஸ்மார்ட்போன்களில் இருப்பதை விட மிகவும் சக்திவாய்ந்தது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது கன்சோல்களுக்கு இணையான கேமிங் அனுபவத்தை ஐபோனில் வழங்கும் திறனை கொண்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 12எம்பி வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இது குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான படங்களை வழங்குகிறது என்பது குறப்பிடத்தக்கது. பின்பு இதில் ட்ரூ டெப்த் செல்பீ கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

மெமரி கொண்ட ஐபோன் 12

ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 12 மாடல்கள் ஆனது கருப்பு, நீலம், பச்சை, ப்ராடெக்ட் (ரெட்) மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த இரண்டு சாதனங்களில் உள்ள பேட்டரி ஆனது நீண்ட நேர பேக்கப் வழங்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ஐபோன் 12 மனி

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மனி சாதனத்தின் விலை 699 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.69,999)

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மனி சாதனத்தின் விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,999)

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 மனி சாதனத்தின் விலை 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.84,999)

64ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.79,999)

128ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 849 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.84,999)

256ஜிபி மெமரி கொண்ட ஐபோன் 12 சாதனத்தின் விலை 949 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.94,999)

புதிய ஐபோன் 12 தொடருடன், ஆப்பிள் தனது புதிய தயாரிப்புகளாக ஹோம் பாட் மினி மற்றும் மேக்ஸாஃப் வயர்லெஸ் சார்ஜரையும் அறிமுகம் செய்துள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.