என்ன தைரியம், திமிர்: ட்விட்டரில் டிரெண்டாகும் #ShameonVijaySethupathi

இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை
800
என்கிற பெயரில் தமிழில் படமாக எடுக்கிறார்கள். ஸ்ரீபதி இயக்கவிருக்கும் அந்த படத்தில் முத்தையா முரளிதரனாக
விஜய் சேதுபதி
நடிக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டார்கள்.

வெளியானது 800 மோஷன் போஸ்டர்: அச்சு அசலாக முத்தையா முரளிதரன் மாதிரியே இருக்கும் விஜேஎஸ்

இந்நிலையில் #ShameonVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதி சக தமிழர்களின் மனதை புண்படுத்திவிட்டதாக அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி பற்றி மக்கள் சமூக வலைதளங்களில் கூறுவதாவது,

ஈழத் தமிழர்களை கொன்ற இலங்கை அரசின் ரத்தம் படிந்த கொடியை விஜய் சேதுபதி தன் சட்டையில் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு என்ன துணிச்சல் இருக்க வேண்டும். ஒரு தமிழர், எதிரியின் அடையாளத்தை சுமப்பதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள ராணுவத்தின் கொடியை விஜய் சேதுபதி தன் நெஞ்சில் குத்திக் கொண்டு படத்தில் நடிப்பதை ஏற்க முடியாது.

எங்களை ஏமாற்றிவிட்டீர்கள் விஜய் சேதுபதி. தமிழ் குடும்பத்தில் பிறந்த போதிலும் தமிழ் தெரியாது என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது. சிங்களரை பற்றி படம் எடுப்பதற்கு பதில் தமிழர் ஒருவரின் வாழ்க்கையை படமாக்கலாமே என்று தெரிவித்துள்ளனர்.

பிற மொழி ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்ன தான் பிரச்சனை?.விஜய் சேதுபதி ஒரு திறமையான நடிகர். இலங்கையை சேர்ந்த ஒருவராக நடிப்பதற்காக போய் அவரை இப்படி பேசலாமா?. தமிழர்களே ஒரு தமிழனை எதிர்க்கும் அளவுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும். மீறி நடித்தால் அந்த படத்தை வெளியிட விட மாட்டோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.