ஐபிஎல் புள்ளிகள் பட்டியல்: 6-ம் இடத்துக்கு முன்னேறிய சிஎஸ்கே அணி!

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சென்னைக்கு இது 3-வது வெற்றி. ஹைதராபாத்துக்கு 5-வது தோல்வி. 

துபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த 29-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே அடித்தது. சென்னை வீரர் ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார். 

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

புள்ளிகள் பட்டியல்

 வரிசை   அணிகள்  ஆட்டங்கள்   வெற்றி   தோல்வி   புள்ளிகள்   நெட்   ரன்ரேட் 
 1.  மும்பை  7  5  2  10  +1.327
 2.  தில்லி  7  5  2  10  +1.038
 3.  பெங்களூர்   7  5  2  10  -0.116
 4.  கொல்கத்தா  7  4  3  8  -0.577
 5.  ஹைதராபாத்   8  3  5  6  +0.009
 6.  சென்னை  8  3  5  6  -0.390
 7.  ராஜஸ்தான்   7  3  4  6  -0.872
 8.  பஞ்சாப்  7  1  6  2  -0.381


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.