கர்நாடக வங்கியின் லாபம் ரூ.119.44 கோடியாக அதிகரிப்பு.. பட்டையை கிளப்பிய பங்கு விலை..!

தனியார் துறையை சேர்ந்த கர்நாடக வங்கி பங்கு விலையானது இன்று 6% அதிகரித்துள்ளது.

இந்த கடன் வழக்குனரின் லாபம் முந்தையாண்டினை விட 12.7% அதிகரித்து, இரண்டாவது காலாண்டில் 119.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 105.91 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

எனினும் இந்த வங்கியின் லாபம் வரிக்கு பின்பு முந்தைய காலாண்டினை விட 39.2% குறைந்துள்ளது.

இவ்வங்கியின் இஎம்ஐ கால அவகாசம் தடையானது முதல் காலாண்டில் 51.12% சரிந்தும், இதே இரண்டாவது காலாண்டில் 11.40% குறைந்தும் காணப்படுகிறது. இதன் நிகர வட்டி வருமானம் 498.7 கோடி ரூபாயிலிருந்து, 575 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கர்நாடக வங்கியின் பங்கு விலையானது பிஎஸ்இ-யில் 6.07% அதிகரித்து, 44.55 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இந்த வங்கி பங்கின் விலையானது இன்று வர்த்தக தொடக்கத்திலேயே 3.1% ஏற்றம் கண்டு. 43.30 ரூபாயாக தொடங்கியது. எனினும் 43.10 ரூபாயினை தொட்டு, பின்பே ஏற்றம் காண தொடங்கியது.

கடந்த நான்கு தினங்களாகவே இந்த வங்கி பங்கின் விலையானது 7.79% அதிகரித்துள்ளது. இந்த வங்கி பங்கின் விலையானது 52 வார உச்சத்தினை கடந்த பிப்ரவரியில் 74.99 ரூபாயாக தொட்டது. இதே 52 வார குறைந்த பட்ச விலையாக 34.50 ரூபாயினை கடந்த மே மாதத்தில் தொட்டது குறிப்பிடத்தக்கது.

ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. இன்ஃபோசிஸ் சொன்ன செம விஷயம்..!

இந்த வங்கியின் சந்தை மதிப்பானது இன்று முடிவு விலையின் படி 1,353 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் வர்த்தக பரிவர்த்தனையானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது செப்டம்பர் முடிவில் 1,27,021.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 2.72% அதிகமாகும்.

அதே போல் டெபாசிட் விகிதம் 70,189.65 கோடி ரூபாயில் இருந்து, 72,922.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வங்கியின் மொத்த வருவாய் 1933.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. எனினும் இது இந்த மதிப்பீடானது ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1,902.41 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் விகிதமானது 3.97% குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 4.78% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.