கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்!

கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்!

|

ஜெனிவா: கொரோனா தொற்று மீண்டும் மின்னல் வேகத்தில் இங்கிலாந்தில் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,234 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா ஒரு நாள் பலி எண்ணிக்கையில் இந்தியாவை மீண்டும் முந்தியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 809 பேர் பலியாகி உள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 3,83,47,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 10,90,179 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,88,35,514 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 84,22,012 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

இந்தியா 2வது இடம்

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 80,89,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 7,237,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கொரோனா தொற்றால் 5,114,823 பேரும், ரஷ்யாவில் 1,326,178 பேரும், ஸ்பெயினில் 925,341 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் முதலிடம்

இங்கிலாந்தில் முதலிடம்

ஒரு நாள் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 63517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 51263 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3வதாக இங்கிலாந்தில் 17,234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை நாள் வரை அங்கு பாதிப்பு குறைவாக இருந்து வந்நிலையில் மின்னல் வேகத்தில் பரவ தொடங்கி உள்ளது. இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 13,868 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவை முந்தியது

இந்தியாவை முந்தியது

உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் 809 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதன் மூலம் அண்மைக் காலத்தில் முதல்முறையாக இந்தியாவை முந்தியுள்ளது அமெரிக்கா. 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 723 பேர் மரணம் அடைந்துள்ளனர். அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் 386 பேர் உயிரிழந்துள்ளனர்.

3வது இடத்தில் இந்தியா

3வது இடத்தில் இந்தியா

ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் 220827 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்றால் இதுவரை 15,1,063 பேர் பலியாகி உள்ளனர். 3வதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 110617 பேர் மரணம் அடைந்துள்ளனர். மெக்ஸிகோவில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 83545 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் 43018 பேர் பலியாகி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.