புதிய OnePlus 8T 5G பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை – Gadgets Tamilan

வரும் அக்டோபர் 14 ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள OnePlus 8T 5G ஸ்மார்ட்போன் முன்பாக விற்பனையில் கிடைக்கின்ற 8டி மாடலை விட கூடுதலான விலை மற்றும் மேம்பாடுகளுடன் வரவுள்ளது. இந்த மொபைலில் 65 வாட்ஸ் விரைவு சார்ஜர் வழங்கப்பட உள்ளது.

6.55 அங்குல FHD+ Fluid AMOLED டிஸ்பிளே உடன் 1080p தீர்மானத்துடன் 120Hz ரிஃபெரஷ் ரேட் கொண்டு தற்போது உள்ள ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மாடலுக்கு மாற்றாக புதிய ஸ்னாப்டிராகன் 865+ பெற்று 8GB + 128GB அல்லது 12GB + 256GB  ஆப்ஷனை கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போனில் 48MP முதன்மையான சென்சார், 16MP அல்ட்ரா வைட் ஏங்கிள் லென்ஸ், 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP போர்ட்ரெயிட் சென்சாருடன் குவாட் கேமரா ஆப்ஷனை பெறுகின்றது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 எம்பி சென்சார் கொண்டிருக்கலாம்.

65 வாட்ஸ் விரைவு சார்ஜிங் வசதியுடன் 4,500mAh பேட்டரியை 0-100 சதவீத சார்ஜ் செய்ய 39 நிமிடம் போதுமானதாகும். மேலும் 58 சதவீத சார்ஜிங் பெற வெறும் 15 நிமிடங்கள் போதுமானதாகும். ஒன்பிளஸ் 8T மாடலில் 5G, 4G LTE, டூயல் பேண்டு வை-ஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவை அமைந்துள்ளது.

ஒன்பிளஸ் 8T 5ஜி மொபைல் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.53,000 முதல் துவங்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.