மச்சான் மச்சான் என சுரேஷுடன் ரொமான்ஸ் பண்ணும் அனிதா.. இருக்கு இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு!

|

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டின் சண்டைக் கோழியான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்துக்கு சுரேஷ் சக்கரவர்த்தியை கண்டாலே ஆகவில்லை.

அவருடைய முக பாவனையிலேயே அவரது வெறுப்புணர்ச்சி தெரிகிறது. சுரேஷ் என்ன செய்தாலும் பேசினாலும் அதனை வைத்து சண்டையை வளர்க்கிறார் அனிதா சம்பத்.

சுரேஷை பிடிக்கவில்லை

சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருக்கவே வேண்டாம் என நினைக்கிறார் அனிதா சம்பத். அவருடன் வீணாக வம்பிழுத்து வரும் அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டின் அடுத்த ஜூலி, உடம்பு முழுக்க விஷம் என்றும் அனிதா சம்பத்தை விளாசி வருகின்றனர் நெட்டிசன்க்ள.

துப்பும் நெட்டிசன்ஸ்

துப்பும் நெட்டிசன்ஸ்

கடந்த வாரம் கமலுக்கு முன்பு சாரி சொன்ன அனிதா சம்பத், அதன் பிறகும் சுரேஷ் சக்கரவர்த்தியிடம் காழ்புணர்ச்சியையும் பகையையும் காட்டி வருகிறார். நேற்றைய எப்சோடிலும் அனிதா சம்பத் நடந்து கொண்ட விதத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டித் தீர்த்தனர்.

இருவரும் செம ஆட்டம்

இருவரும் செம ஆட்டம்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் சண்டைக் கோழிகளாக வலம் வரும் அனிதா சம்பத்தும் சுரேஷ் சக்கரவர்த்தியும் செம ஆட்டம் போட்டுள்ளனர். சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம்பெற்ற சின்ன மச்சான் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர் இருவரும்.

செம க்யூட் பர்ஃபாமன்ஸ்

செம க்யூட் பர்ஃபாமன்ஸ்

அந்த பாடலில் இடம் பெற்ற காஸ்ட்யூமில் அசத்தலாக நடனமாடியுள்ளனர். பார்க்கவே அவ்வளவு அழகாக உள்ளது அவர்களின் ஆட்டம். சுரேஷ் சக்கரவர்த்தியின் பர்ஃபாமன்ஸ் செம க்யூட்.. ஒவ்வொரு வரிக்கும் அத்தனை அற்புதமாக எக்ஸ்பிரஷன் கொடுத்துள்ளனர் இருவரும்.

எதில் முடியப் போகிறதோ?

எதில் முடியப் போகிறதோ?

இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்று செமயான எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கு என வாயை பிளந்துள்ளனர். சுரேஷை கண்டாலே அனிதா சம்பத்துக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் இருவரையும் சேர்த்துவிட்டு ஆட்டம் போட வைத்துள்ளார் பிக்பாஸ். இது எதில் போய் முடியப்போகிறதோ என்ற பரபரப்பு இப்போதே ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.