மொட்டை சுரேஷ், ரியோ நேருக்கு நேர் மோதல்.. பிக்பாஸ்4 ல் பரபரப்பு..

பிக்பாஸ்4 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குவாதம், மோதல் நடக்கிறது. நடிகை ரேகா முதல் சுரேஷ் வரை மோதல், தாஜா, நக்கல், நய்யாண்டி எனப் பல சுவாரஸ்யங்கள் தினமும் அதிகரித்து வருகிறது.இன்று ஒளிபரப்பாகும் பிக்பாஸ்4ல் நடக்கும் மோதல் பற்றிய புரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் படுக்கையில் அருகருகே அமர்ந்திருக்கும் மொட்டை சுரேஷும். ரியோ ராஜும் வாக்குவாதம் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த வீட்டில் குரூப்பிஸம் இருக்குன்னு நீங்க என்னய பற்றித்தான் சொல்றீங்கன்னு எனக்குப் பச்சையா தெரியுதுன்னு ரியோ சொல்ல, உங்கள இல்ல தம்பி என மழுப்புகிறார் சுரேஷ். பிறகு நீங்களும் நிஷாவும் பிரண்ட்ஸ், வீட்டுக்குள்ள வர்ரதுக்கு முன்னிலிருந்தே பிரண்ட்ஸ் உங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க. நீங்க எல்லாரும் பண்ணது எதுவுமே என்னைய வீக் பண்ணலே என்றுதான் சொல்றேன் என்றார் சுரேஷ். உடனே ரியோ,நாங்க எல்லாரும் உங்கள என்ன பண்ணோம்னுதான் கேட்கறேன் என்று கேட்க அத்துடன் புரோமோ முடிகிறது.

ரியோவும் அறந்தாங்கி நிஷாவும் மற்றவர்களும் என்ன பண்ணாங்க என்று சுரேஷ் சொல்வாரா என்பது இன்று இரவில் தெரியும்.இருவரின் வாக்கு வாதமும் ஜித்தன் ரமேஷ், கேப்ரில்லா வின் கவனத்தை ஈர்க்க அவர்கள் அதை உன்னிப்பாகக் கவனிக்கின்றனர்.

https://tamil.thesubeditor.com/news/bigg-boss/23731-bigboos4-suresh-rio-raj-direct-clash.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.