ரஜினிக்கு டோஸ் விட்ட நீதிபதி !! சிஸ்டம் எல்லாம் சரியா தான் இருக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமான சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்படத்திற்கு, சென்னை மாநகராட்சி விதித்த ரூ.6.50 லட்சம் சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளது மக்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது. 

கொரோனா முடக்கத்தால் கடந்த 6 மாத காலமாக தமிழகம் முழுவதும் பொழுதுபோக்கு மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது.  தற்போது, தளர்வுகள் அடிப்படையில் திருமண மண்டபங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு சொந்தமாக உள்ள  ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி கோரியுள்ளது.  ஆனால், ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் மத்திய, மாநில அரசுகள் விதித்த பொதுமுடக்கம் காரணமாக மண்டபம் வாடகைக்கு விடாமல் காலியாக இருந்ததாகவும், எனவே, சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என ரஜினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில், சிஸ்டம் சரியில்லைன்னு சொன்னியே தலைவா… கோடிகளில் சம்பளம் வாங்கும் உனக்கே இந்த நிலையா? என்றும், மாடி வீட்டு ஏழை.. கொரோனாவால சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாரு..’ என்கிற ரீதியிலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

இந்நிலையில், ரஜினிகாந்த தொடர்ந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிமன்ற நேரத்தை வீண்டிக்க கூடாது என்றும் நீதிபதி எச்சரித்தார்.வழக்கை வாபஸ் பெறுவதாக உறுதியளிக்க வேண்டும் என ரஜினிகாந்த்துக்கு  நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவு.

நீதிபதி கண்டனத்தை அடுத்து வரி செலுத்த விலக்கு கேட்ட வழக்கை திரும்பப் பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்.

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.