வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து நவம்பர் 3ஆம் தேதி அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு குறித்து நவம்பர் 3ஆம் தேதிஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

2021 மே மாதம் சட்டப் பேரவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக வரைவு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், அடுத்த மாதம் 3ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.