நடிப்பது மட்டுமே என் வேலை! – Acting Only My work

நடிப்பது மட்டுமே என் வேலை!

15 அக், 2020 – 04:31 IST

‘ஆன்லைன்’ வாயிலாக வெளியாகியுள்ள, ‘அந்தாலஜி’ வகை படமான, புத்தம் புதுகாலை படத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர், ஆன்லைன் மூலம் அளித்த பேட்டி:நான் நடித்துள்ள, ‘அவளும் நானும்/அவரும் நானும்’ கதை, தாத்தாவுக்கும் பேத்திக்குமான கதை. இப்போதைக்கு, இவ்வளவு தான் கூற முடியும். இயக்குனர் கவுதம்மேனன், கதை சொன்ன விதத்தை கேட்டதுமே, எனக்கு பிடித்து விட்டது. தியேட்டர் என்றாலும், ஆன்லைன் என்றாலும், கலைஞனை பொறுத்தவரையில் நடிப்பு ஒன்று தான். பார்க்கும் அனைவருமே ரசிகர்கள் தான்.படத்தை எங்கு வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிக்க, ஜாம்பவான்கள் உள்ளனர். அதில், நான் ஏதும் சொல்ல முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.