செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர் மழைப் பொழிவால் 14 ஏரிகள் முழுவதும் நிரம்பின..!

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழையால் 14 ஏரிகள் நிரம்பியுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கு கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் செம்பாக்கம், நத்தப்பேட்டை, வையாவூர் உள்ளிட்ட 14 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. மேலும் 69 ஏரிகளில் 75 விழுக்காடு நீர் நிரம்பியுள்ளது.

109 ஏரிகளில் 50 விழுக்காட்டுக்கு மேல் நீர் நிரம்பி உள்ளதாகப் பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இன்றும் மழை பெய்து வருவதால் மேலும் பல ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.