செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1720 கன அடியாக உயர்வு

தொடர் மழையால் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1720 கன அடியாக உயர்வு

சென்னை, நவ. 16–

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1720 கன அடியாக உயர்ந்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம், கிருஷ்ணா நதிநீர் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. நீர்வரத்து 1095 கன அடியாக உள்ளது.

சோழவரம் ஏரியில் நீரின் கொள்ளளவு 142 மில்லியன் கன அடியாகவும், புழல் ஏரியில் 2367 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. தற்போது தொடர் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீரின் வருகையால் ஏரியன் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாக உள்ளது. தற்போது நீரின் கொள்ளளவு 2781 மில்லியன் கன அடியாகவும், ஏரிக்கு நீர்வரத்து 1720 கனஅடியாகவும் உள்ளது. கடந்த ஆண்டு நாளில் 442 மல்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்தது.

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி எந்த நேரத்திலும் நிரம்பலாம் என்பதால் தொடர்ந்து ஏரியை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். அடிக்கடி ஏரியின் நீர்மட்டத்தையும் அளவீடு செய்து வருகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இப்போது 6,706 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 4 ஏரிகளில் 3,148 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.