புற்றுநோயால் தவித்த நடிகர் தவசி… இலவச சிகிச்சை கொடுக்கும் திமுக எம்எல்ஏ!

தேனி மாவட்டம் கோணம்பட்டியை சேர்ந்தவர் குணச்சித்திர நடிகர் தவசி. 1990 முதல் திரைப்படத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதுவரை 147 படங்களில் இவர் நடித்திருக்கிறார். கிழக்கு சீமையிலே.. துவங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் இவருடைய நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மிகப் பெரிய மீசையுடன் கருப்பன் குசும்புக்காரன் என்ற இவரது டயலாக் பட்டி தொட்டியெல்லாம் பிரசித்தம்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னதாக தவசிக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட து. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவசி கடந்த ஐந்து தினங்களுக்கு மேலாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புற்றுநோயின் காரணமாக முழுவதுமாக உடல் உருக்குலைந்து அடையாளமே தெரியாத நிலை யில்யில் தன்னை வாழ வைத்த திரையுலகத்தை சேர்ந்த நண்பர்கள் உதவியை தனக்கு உதவி வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருக்கிறார். மிகப் பெரிய மீசையுடன் ஆஜானுபாகுவாக இருந்த குணச்சித்திர நடிகர் தவசி உடல் மெலிந்து பார்ப்பவர்களை கண்ணீர் மல்க செய்கிறது.

இதற்கிடையே, நடிகர் தவசி குறித்த செய்திகள் வெளியே தெரியத் தொடங்கியதும், அவருக்கு உதவ பல்வேறு நபர்கள் முன்வந்துள்ளனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏவும் மருத்துவருமான சரவணன், நடிகர் தவசியை தன்னுடைய மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு இலவச சிகிச்சை கொடுத்து வருகிறார். இது தொடர்பாக புகைப்படங்களை பதிவிட்டு, “நகைச்சுவை நடிகர் தவசி அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் எம்எல்ஏ சரவணன்.

https://tamil.thesubeditor.com/news/cinema/25327-dmk-mla-saravanan-helps-actor-thavasi-who-suffered-cancer.html

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.