லாஸ்லியாவின் தந்தை மறைவு குறித்து பிக்பாஸ் வனிதாவின் சோக பதவி, இதோ..

பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் லாஸ்லியா, மேலும் இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் கன்னடாவில் வசித்து வரும் அவரின் தந்தை மரியனேசன், இன்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இது குறித்து பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது லாஸ்லியா உடன் பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்ட வனிதா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்த செய்தியைக் கேட்டதும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் இதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக 3 மகள்கள் மிகவும் மனம் உடைந்திருப்பார்கள்.

வாழ்க்கை மிகவும் கணிக்க முடியாதது. அவர்களால் குறைந்தபட்சம் தகுந்த நேரத்தில் அவரது உடலைத் திரும்பப் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.