2 மில்லியன் லைக்ஸ் கடந்த மாஸ்டர் டீசர், புதிய சாதனை

2 மில்லியன் லைக்ஸ் கடந்த ‘மாஸ்டர்’ டீசர், புதிய சாதனை

16 நவ, 2020 – 13:15 IST

தீபாவளி தினத்தில் தங்களுக்கு கொண்டாட்டமாக அமைய ‘மாஸ்டர்’ டீசர் வராதா என ஏங்கிய விஜய் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றினர் படக்குழுவினர். தீபாவளி தினத்தன்று மாலை 6 மணிக்கு டீசரை யு-டியூபில் வெளியிட்டனர். வழக்கம் போல ஒரு புதிய சாதனையை படைத்தது டீசர். குறைந்த நேரத்தில் அதிக லைக்குகளை உலக அளவில் பெற்ற ஒரு திரைப்பட டீசர் என்ற பெருமையைப் பெற்றது.
கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து யு-டியுப் டிரென்டிங்கில் முதலிடத்தில் உள்ள ‘மாஸ்டர்’ டீசர் தற்போது 2 கோடி பார்வைகளைக் கடந்தும், 2 மில்லியன் லைக்குகளைக் கடந்தும் சென்று கொண்டிருக்கிறது.
இந்திய அளவில் அதிக லைக்குகளை குறைந்த நேரத்தில் பெற்ற முதல் திரைப்பட டீசர் ‘மாஸ்டர்’ என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு விஜய் நடித்த ‘சர்கார்’ பட டீசர் லைக்ஸ் சாதனை படைத்து முதலிடத்தில் இருந்தது. இப்போது தன் பட சாதனையை தானே முறிடியத்துள்ளார் விஜய்.
டீசரைப் பற்றிய சில விமர்சனங்கள் இருந்தாலும் விஜய் ரசிகர்கள் அதை மறந்து படத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். பொங்கல் தினத்தில் படம் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேளை டிசம்பர் 1 முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அரசு அனுமதி வழங்கினால் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும் படம் வெளிவரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.