EMI அவகாசம் மார்ச் 2022 வரை வேண்டும்.. மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் கோரிக்கை..!

கொரோனா என்னும் பெருந்தொற்றினால் இன்று உலகமே ஒரு வழியாக பயத்தில் உள்ளது எனலாம். ஏனெனில் பொருளாதார ரீதியாகவும், விலைவாசி உயர்வு, பணவீக்கம் இப்படி பல பிரச்சனைகளினால் பெருத்த அடி வாங்கியுள்ளனர்.

ஆக இந்த கொரோனா வந்தாலும் வந்தது. மக்களை படுத்தி எடுத்து வருகின்றது எனலாம். இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து போடப்பட்ட லாக்டவுன், தற்போது வரையில் பற்பல தளர்வுகளுடன் நீடித்து வருகின்றது.

இந்த லாக்டவுன் காலத்தில் தங்களது வேலை, வருமான வாய்ப்புகளை இழந்த மக்கள், தங்களது அன்றாட தேவைகளுக்கே கஷ்டப்பட்ட நிலையில், வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்தனர்.

6 மாத காலம் அனுமதி

மக்களின் கஷ்டத்தினை புரிந்து கொண்ட ரிசர்வ் வங்கியானது, மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் ஆறு மாத காலத்திற்கு வங்கிகளுக்கு இஎம்ஐ தவணையை செலுத்த அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக ஆறு மாத காலமாக வங்கி பிரச்சனையில் இருந்து சற்று தள்ளியிருந்தனர். இதற்கடுத்தாற்போல் மற்றொரு பெரிய ஆறுதல் கிடைக்கும் விதமாக வட்டிக்கு வட்டி தள்ளுபடி, கடன் மறுசீரமைப்பு என கொடுத்தது.

6 மாத காலம் அனுமதி

6 மாத காலம் அனுமதி

மக்களின் கஷ்டத்தினை புரிந்து கொண்ட ரிசர்வ் வங்கியானது, மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் வகையில் ஆறு மாத காலத்திற்கு வங்கிகளுக்கு இஎம்ஐ தவணையை செலுத்த அனுமதி கொடுத்தது. இதன் காரணமாக ஆறு மாத காலமாக வங்கி பிரச்சனையில் இருந்து சற்று தள்ளியிருந்தனர். இதற்கடுத்தாற்போல் மற்றொரு பெரிய ஆறுதல் கிடைக்கும் விதமாக வட்டிக்கு வட்டி தள்ளுபடி, கடன் மறுசீரமைப்பு என கொடுத்தது.

கூடுதல் கடன் எதிர்பார்ப்பு

கூடுதல் கடன் எதிர்பார்ப்பு

சத்ரபதி சிவாஜி விமான நிலையம் என்று அழைக்கப்படும் MIAL, அனைத்து கடன்களுக்கும் வட்டி விகிதத்தினை குறைக்க கோரியுள்ளது. அதோடு கூடுதல் கால கடன்களையும் கோரியுள்ளது என்று பிசினஸ் ஸ்டேண்டர்டு அறிக்கை கூறுகின்றது. தற்போதுள்ள கடன்கள் மற்றும் பணி மூலதன வசதிகளாய் மறுசீரமைப்பதற்கான திட்டத்தினை MIAL சமர்பித்துள்ளது. அதோடு அதன் ரியல் எஸ்டேட் கடன்களையும் மறுசீரமைக்க விண்ணப்பித்துள்ளது.

,மோசமாக பாதிப்பு
 

,மோசமாக பாதிப்பு

கொரோனா காரணமாக தனது நீண்டகால செயல்பாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 92 சதவீதம் சரிந்து, நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 18.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்திற்கும் பங்கு

அதானி குழுமத்திற்கும் பங்கு

கவுதம் அதானியின் அதானி குழுமம், இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தினை இயக்கும் மும்பை இண்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (Mumbai International Airport Limited) நிறுவனத்தின் 74% பங்குகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த பரிவர்த்தனையின் கீழ், அதானி குழுமம் ஜிவிகே குழுமத்தின் 50.5 சதவீத பங்குகளையும் கையகப்படுத்தும். இதோடு கூடுதலாக சிறுபான்மை பங்காளிகான ஏர்போர்ட் கம்பெனி ஆப் சவுத் ஆப்பிரிக்கா (Airport Company of South Africa) மற்றும் பிட்வெஸ்ட் (Bidvest) பங்குகளையும் வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்களில் முறையே 10% மற்றும் 13.5% பங்குகளை கையகப்படுத்தலாம் என்றும் அறிக்கைகள் கூறப்படுகின்றது.

மிகப்பெரிய ஆப்ரேட்டர்

மிகப்பெரிய ஆப்ரேட்டர்

முதலில் இந்த நடவடிக்கையினை தடுக்க ஜிவிகே நீதிமன்றத்தினை நாடியது. எனினும் இந்த நிறுவனத்தால் போதிய நிதியினை திரட்ட முடியவில்லை. ஏற்கனவே ஆறு விமான நிலையங்களை அதானி கொண்டு இருக்கும் நிலையில், தற்போது இதனை கையகப்படுத்தினால் மிகப்பெரிய விமான நிலைய ஆபரேட்டராக அதானி மாறும் என்றும் கூறப்படுள்ளது.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

இந்த கையகப்படுத்தல் நடவடிக்கையினால் நவி மும்பை ஏர்போர்ட்டில், மியாலின் இயக்கத்தில் 74% பங்குகளுக்கான உரிமையை இது வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜிவிகே குழுமத்தில் கடன் வழங்குபவர்களிடமிருந்து

பெரும் அழுத்தம் இருந்து வருவதாகவும், மியாலுக்கும் அடுத்து வரும் கடன் அட்டவணைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக ஏற்கனவே கடன் பிரச்சனை காரணமாக அழுத்தத்தில் இருந்து வந்த நிறுவனம், தற்போது கொரோனாவின் காரணமாக பெரும் அழுத்தத்தினை கண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.