அட கடவுளே.. இவ்ளோ நடந்திருக்கா? சுச்சி எவிக்ஷனுக்கு பின்னணியில் உள்ள பரபரப்பு காரணம்!

|

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து சுச்சி வெளியேற்றபட்டதன் பின்னணியில் உள்ள பரபரப்பு காரணம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் சுச்சி. பிரபல பாடகி, ஆர்ஜே, நடிகை, தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஹேக் செய்துவிட்டனர்

இதனால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. சுச்சியின் இந்த செயலுக்கு எதிர்ப்புகள் எழவே தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்றார்.

தீவிர மன அழுத்தம்

தீவிர மன அழுத்தம்

அவரது கணவரான கார்த்திக் சுச்சிக்கு மனநிலை சரியில்லை என்று கூறி விவாகரத்து செய்தார். திரைத்துறையை சேர்ந்த நட்பு வட்டத்தால் ஓரங்கப்பட்ட சுச்சி மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்தார்.

ஈமோஜிகள்

ஈமோஜிகள்

இந்நிலையில் சுச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். போன வேகத்தில் ஒவ்வொரு ஹவுஸ்மெட்டுக்கும் ஒவ்வொரு ஈமோஜிகளை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கண்ணை மூடிக்கொண்டு

கண்ணை மூடிக்கொண்டு

இருந்த போதும் பாலாஜி மீது ரொம்பவே அன்பு கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டிலேயே பாலாஜியுடன் மட்டுமே நெருங்கி பழகிய சுச்சி, அவர் செய்து அனைத்து வேலைக்கும் கண்ணை மூடிக்கொண்டு சப்போர்ட் செய்து வந்தார்.

ஸ்டேபிளாக இல்லை

ஸ்டேபிளாக இல்லை

மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் ஓவராய் ரியாக்ட் செய்து வந்தார். இதனால் அவருடன் பேசவே அச்சப்பட்டனர் ஹவுஸ்மெட்ஸ். திடீர் திடீரென கோபப்படுவது சிரிப்பது என நிலையாகவே இல்லை சுச்சி.

திடீரென அழுகை

திடீரென அழுகை

நேற்று முன்தினம் கூட பாலாஜியுடன் ஜெயிலுக்கு போன சுச்சி, பாட்டு பாடிக்கொண்டிருந்தார். பின்னர் திடீரென அழத் தொடங்கி விட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் சுச்சிக்கு என்ன ஆனது? ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அவரை வெளியேற்றுவதுதான் அவருக்கு நல்லது என தெரிவித்து வந்தனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுச்சிதான் வெளியேற்றப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு ஒளிபரப்பப்படும் எபிசோடில் வெளியாகும். இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து சுச்சி வெளியேற்றப்பட்டதற்கான பரபரப்பு காரணமும் வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் அலறல்

நள்ளிரவில் அலறல்

அதாவது சுச்சி, பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் முன்பு அனைத்து போட்டியாளர்களையும் போல ஸ்டார் ஹோட்டலில் குவாரண்டைனில் தங்க வைக்கப்பட்டிருந்தார். ராமாபுரத்தில் தங்கியிருந்த ஸ்டார் ஹோட்டலில் நள்ளிரவில் தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி அலறியடித்து ஓடியதாக தகவல் வெளியானது.

பிக்பாஸிலும் அதேவேலை

பிக்பாஸிலும் அதேவேலை

இதனை தொடர்ந்து சுச்சிக்கு மன நல மருத்துவரிடம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதே வேலையை சுச்சி பிக்பாஸ் வீட்டிலும் செய்ததாக தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸையும் அடிக்கடி பேச வேண்டும் எனக்கூறி நச்சரித்துள்ளார்.

தனிமையிலேயே

தனிமையிலேயே

திடீர் திடீரென கத்துவது, அழுவது, அலறுவது என இருந்துள்ளார். மேலும் பிக்பாஸிடமும் அது வேண்டும் இது வேண்டும் என் கேட்டு தொல்லை செய்து வந்துள்ளார். மேலும் எப்போதும் தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் அறையிலேயே அமர்ந்துள்ளார்.

பெரும் குடைச்சல்

பெரும் குடைச்சல்

அவரது நடவடிக்கையால் ஹவுஸ் மெட்ஸ் மட்டுமின்றி நிகழ்ச்சி குழுவும் பெரும் குடைச்சலில் இருந்து வந்துள்ளனர். இதனால் எப்போது சுச்சியை வெளியேற்றுவோம் என்றுதான் எதிர்பார்த்திருந்ததாக கூறப்படுகிறது.

வெளியேற்றம்

வெளியேற்றம்

இந்நிலையில் இந்த வாரம் அதிக ஓட்டுகள் பெற்று நாமினேஷனில் டாப்பில் இருந்த அவரை குறைந்த வாக்குகளை பெற்றதாக கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த ரசிகர்கள் சுச்சி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லாமலே இருந்திருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.