அமித்ஷா வருகைக்காக காத்திருந்தனரா? அதிமுகவை வறுத்தெடுக்கும் தங்கம் தென்னரசு!!

மருத்துவ மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு செலுத்தும் என தமிழக அரசு அந்த அறிவிப்பை கலந்தாய்வின் போதே அறிவித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. அறிவிப்பதில் தமிழக அரசிற்கு என்ன சிக்கல். அமித்ஷா வருகைக்காக காத்திருந்தனரா? என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, இட ஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என்ற அறிவிப்பு மாணவர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தாங்கிக் கொள்ளமுடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை தமிழக அரசு வழங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர் கட்டணம் குறித்து தி.மு.க அறிவித்த உடனே அவசர அவசரமாக அறிவித்து அதிமுக நாடகமாடுகிறது. தமிழக அரசு இந்த அறிவிப்பை கலந்தாய்வின் போதே அறிவித்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை.

தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தும் என அறிவிப்பதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? அமித்ஷா வருகைக்காக காத்திருந்தார்களா ? எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், செல்லக்கிளி புருசன் செவ்வாய்க்கிழமை செத்தானாம் வீடு வெறிச்சோடி இருக்கேனு வெள்ளிகிழமை அழுதாளாம்’ எனும் கதையாக உள்ளது என்றும் காட்டமாக விமர்ச்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.