அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டியது

வாஷிங்டன்,
உலக வல்லரசு நாடான அமெரிக்கா, கொரோனா தொற்று பாதிப்பால் கதி கலங்கியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. 

அங்கு கடந்த சில தினங்களாக ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும். அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.