அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு வரும் டொனால்ட் ட்ரம்புக்கு வழங்கிய கொரோனா தடுப்பு மருந்து!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது. இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி வைரஸ் கிருமையை அழிப்பதில் 90 சதவீதம் திறனுடன் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல், ரஷ்யா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் V தடுப்பூசி கொரோனாவை அழிப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான மாடர்னா தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. தற்போது கொரோனா 2ஆவது அலையும் அங்கு பரவி வருகிறது. அந்நாட்டில் மட்டும் 1 கோடியே 22 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு வழங்கிய
ஆன்டிபாடி
சிகிச்சையை அவசர தேவைக்கு பயன்படுத்தும்படி
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்
அனுமதி வழங்கி உள்ளது.

ஹேப்பி நியூஸ்: விற்பனைக்கு வரும் கொரோனா தடுப்பூசி!

முன்னதாக, அமெரிக்க அதிபர்
டொனால்ட் ட்ரம்ப்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட
ரீஜெனரான்
நிறுவனத்தின் REGN-COV2 தடுப்பு மருந்தை அவசரத் தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த தடுப்பு மருந்து இரண்டு ஆன்டிபாடிகளின் கலவையாகும். அவற்றில் ஒன்று கொரோனாவுக்கு காரணமான கிருமிக்கு எதிராக போராடுகிறது. மற்றொன்று நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவையை இந்த தடுப்பு மருந்து குறைத்தது கண்டறியப்பட்டதால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.