இடம் மாறும் மஹாத்மா காந்தி சிலை| Dinamalar

புதுடில்லி: பார்லிமென்டில், எப்போது ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடந்தால், எம்.பி.,க்களின் பின், மஹாத்மா காந்தி, அமைதியாக சிலை வடிவில் அமர்ந்திருப்பார்.

‘டிவி’ க்களில் இதை பார்த்திருக்கலாம்.தற்போது புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. புதிய பார்லிமென்டின் முன், காந்தி சிலை நிறுவ வேண்டும். எனவே, தற்போதுள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து, புதிய இடத்தில் வைக்க வேண்டும்.

பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மற்ற சிலைகளும் இடம் மாற வேண்டும். புதிய கட்டடம் கட்டும் வரை, வேறொரு இடத்தில், இந்த சிலைகள் வைக்கப்படும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மிகவும் கவனமாக, காந்தி உட்பட மற்ற சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளாராம், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.