இந்த பார்மா நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

இந்திய பங்கு சந்தையில் மருத்துவ பங்குகளுக்கு என்று எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் உயிரைக் காப்பாற்றும் மருந்துகளுக்கு எப்போதும் நல்ல தேவை இருக்கும். இதனால் பங்குகள் விலை அதிகரிக்கலாம் என்பது நம் முதலீட்டாளர்களின் உணர்வு.

இது இந்திய முதலீட்டாளர்கள் மட்டும் அல்ல, சர்வதேச முதலீட்டாளர்களும் அப்படித் தான். அதனால் தானே என்னவோ? மருத்துவ பங்குகள் எப்போதும், மற்ற பங்குகளுடன் ஒப்பிடும்போது சற்று பாதுகாப்பானதாகவே உணரப்படுகிறது.

அதிலும் இந்த கொரோனா காலகட்டத்தில் சொல்லவே வேண்டியதில்லை. ஏனெனில் உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதன் காரணமாக மருந்து பொருட்களின் விற்பனையும் அமோகம் தான். இதனாலேயே குறிப்பிட்ட மருத்துவ பங்குகள் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகின்றன.

சிக்கலில் கிரெடிட் கார்டு கடன்.. ஹெச்டிஎஃப்சியில் எப்படி EMI ஆக மாற்றுவது?

என்னென்ன பங்குகள் பரிந்துரை

என்னென்ன பங்குகள் பரிந்துரை

இதற்கிடையில் இன்று ETயில் வெளியான ஒரு அறிக்கையில், நான்கு மருத்துவ பங்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றித் தான் பார்க்க போகிறோம் வாருங்கள்.

லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது சிப்லா, டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், சன் பார்மா, லூபின் உள்ளிட்ட பங்குகள் உள்ளன. இவை நிச்சயம் வருமானம் தரக்கூடிய பங்குகளாக இருக்கும் என்றும் பார்மா & ஹெல்த் கேர் நிபுணரான நித்யா பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஏன் பரிந்துரை?

ஏன் பரிந்துரை?

அதெல்லாம் சரி எதற்காக இந்த பங்குகளை பரிந்துரை செய்துள்ளார். எதுவும் முக்கிய காரணம் உண்டா எனில், நிச்சயம் உண்டு.

மேற்கண்ட இந்த நிறுவனங்கஸ்ளின் மருந்துகளுக்கு அமெரிக்காவில் வலுவான வணிக திறன் உண்டு. தேவையும் உண்டு. அதோடு இந்திய மருத்துவ சந்தையிலும் இந்த பங்குகள் முன்னணியில் உள்ளன.

இரு இலக்க வளர்ச்சி
 

இரு இலக்க வளர்ச்சி

ஆக நீங்கள் இந்த பங்கினை தேர்வு செய்யலாம். இந்த நிறுவனங்களின் மருத்துவ பொருட்கள் அண்டை நாட்டு சந்தைகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதே இந்திய சந்தையினை பொறுத்தவரையில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இரு இலக்க வளர்ச்சியினைக் கண்டுள்ளன. இது நாட்டில் அதிகப்படியான தேவையின் காரணமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா காலத்தில் முக்கிய பங்கு

கொரோனா காலத்தில் முக்கிய பங்கு

அபோட், சன் பார்மா மற்றும் சிப்லா போன்ற நிறுவனங்கள் கொரோனா காலத்தில் முக்கிய பங்களிக்கும் விதமாக இருந்து வருகின்றன. சொல்லப்போனால் கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவை வரும் காலத்திலும் தொடர்ந்து நன்றாக செயல்படலாம் என்று எதிர்பார்க்கிறேன் என்றும் நித்யா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.