இரண்டு புதிய அமைச்சுக்கள் குறித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்


இரண்டு புதிய அமைச்சுக்கள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புதிய வர்த்மானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய அமைச்சுக்கள் இரண்டினை நிறுவும் நோக்கில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப்பாதுகாப்பு அமைச்சு மற்றும் தொழிநுட்ப அமைச்சு ஆகியனவே இவ்வாறு ஜனாதிபதியினால் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.

இந்த இரண்டு அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் அமைச்சுக்களின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த இரண்டு அமைச்சுக்களும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் என வார இறுதி ஊடகமொன்று முன்னதாக தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.