இராணுவ வீரர் கருப்பசாமி உடலுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி.!

காஷ்மீரின் இந்திய எல்லை பகுதியான லடாக் பகுதியில், நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் நேற்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரின் மகன் கருப்பசாமி (வயது 34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்தார். 

இந்திய இராணுவத்தில் ‘நாயக்’ பதவி வகித்து வந்த கருப்பசாமி, காஷ்மீரின் லடாக் பகுதியில் பணியில் இருந்த போது நடந்த விபத்தில் மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக உயிரிழந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (வயது 7), வைஷ்ணவி (வயது 5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (வயது 1) என்ற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல், விமானம் மூலம் உடல் மதுரை வந்தடைந்தது. அங்கு அவருக்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, ரானுவ வீரர் கருப்பசாமி உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முழு இராணுவ மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.