இலங்கையில் இன்று பதிவாகிய கொரோனா தொற்றாளிகளின் முழுமையான நிலவரம்!


இலங்கைக்குள் இன்று மாத்திரம் 391 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாவரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களின் தொடர்புகளில் இருந்து தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று இராணுவ தளபதி அறிவித்துள்ளார்

இந்த எண்ணிக்கையை அடுத்து இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 62 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் 6010 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை 14ஆயிரத்து 69 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.