கச்சா எண்ணெய் விலை $60ஐ தாண்டும்.. அப்போ பெட்ரோல், டீசல் விலை 100ஐ தாண்டுமா?!

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கச்சா எண்ணெய் விலை மிகவும் முக்கியம், ஆனால் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தாலும், சில நாடுகள் மட்டுமே கச்சா எண்ணெய் சந்தையில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தாலும் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் அபாயம் நிலவுகிறது.

கொரோனா மருந்தை விடவும் தற்போது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது மிகவும் முக்கியமாக உள்ளது. இதற்குக் கச்சா எண்ணெய் விலை சாதகமாக இருந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக நிலை உயர்ந்து கொரோனா மருந்து வாங்குவதற்கான நிதியை எளிதாகத் திரட்ட முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் 42 முதல் 45 டாலர் வரையில் வர்த்தகம் செய்யப்படும் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை, 2021 முடிவிற்குள் அல்லது 2021ஆம் துவக்கத்தில் 60 டாலரைத் தாண்டும் எனச் சிட்டி குரூப் கணித்துள்ளது.

OPEC+ கூட்டமைப்பு

OPEC கூட்டமைப்பின் துணைப்பிரிவான OPEC+ அமைப்பில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி அரபு நாடுகள் மத்தியில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளில் சில முரண்பாடுகள் நிலவி வருகிறது. இதனால் சவுதி, ஈராக், ஐக்கிய அரபு நாடுகள் மத்தியில் தற்போது கசப்பான பேச்சுவார்த்தை நிலவுகிறது

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

இந்நிலையில் வருகிற நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி OPEC கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதமே இக்கூட்டமைப்பு உற்பத்தி குறைப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்ட நிலையில் இதுநாள் வரையில் அமலாக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இதனால் இக்கூட்டத்தின் முடிவில் உற்பத்தியை குறைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகளவில் நம்பப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

உற்பத்தி குறைந்தால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு இதன் விலை தாறுமாறாக அதிகரிக்கத் துவங்கும். இதனால் சிட்டி குரூப் செப்டம்பர் மாதம் கணித்து வெளியிட்ட படி ஒரு பேரல் கச்சா எண்ணெய் 60 டாலர் வரையில் உயரும் வாய்ப்புகள் உள்ளது.

முதலீடு
 

முதலீடு

கொரோனா தொற்று எண்ணிக்கை சில நாடுகளில் இன்னமும் அதிகரித்து வந்தாலும், பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் முதலீட்டுச் சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு மூலம் ஏற்படும் வர்த்தக மாற்றம் கச்சா எண்ணெய் சந்தையில் முதலீட்டு அளவு அதிகரிக்க அதிகளவில் வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் மாத ஆர்டர்கள்

டிசம்பர் மாத ஆர்டர்கள்

நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி நடக்க இருக்கும் OPEC கூட்டமைப்புக் கூட்டத்தில் உற்பத்தி குறைப்பு குறித்த முடிவுகள் நிச்சயம் அமலாக்கம் செய்யப்படும் நம்பிக்கையில் டிசம்பர் மாத ஆர்டர்கள் மீதான முதலீடுகள் அதிகரித்துக் கடந்த ஒரு வாரமாக அனைத்து கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வருகிறது.

முக்கியக் கச்சா எண்ணெய்

முக்கியக் கச்சா எண்ணெய்

கடந்த ஒரு வார காலத்தில் WTI கச்சா எண்ணெய், பிரெண்ட் கச்சா எண்ணெய், மார்ஸ் யூஎஸ் கச்சா எண்ணெய், OPEC பேஸ்கட், கனடியன் கச்சா எண்ணெய், DME ஓமன் கச்சா எண்ணெய் ஆகியவை சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இந்தியா

இந்தியா

சர்வதேச கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை 60 டாலரைத் தொட்டால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாயை தொடும் எனக் கணிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.