கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெறவைக்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி !

 

கூட்டணியை நாங்க பாத்துக்கிறோம், வேட்பாளரை நீங்க பாத்துக்கோங்க என அதிமுக ஆலோனைக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சென்னையில், அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதில், அதிமுக, மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், பங்கேற்றனர். கூட்டம் மாலை, 5 மணிக்கு துவங்கி,  7 மணி அளவில் நிறைவு பெற்றது. 

கூட்டத்திற்கு வருகை தந்த, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த கூட்டத்தில்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளிடம் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில், கூட்டணிக் கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அனைவரும் ஏற்று, வெற்றி பெறவைக்க வேண்டும். சீட் கிடைக்கவில்லை என யாரும் கூறக்கூடாது. கோஷ்டி பூசல் அறவே இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கடந்த லோக்சபா தேர்தலில், நாம் தோற்றதற்கு, கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததே காரணம். அந்த நிலை, தற்போது வரக்கூடாது. வாரம் ஒரு முறையாவது கட்சியினரை சந்திக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.