காதலி வந்ததால் முதலிரவு அறையிலிருந்து மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு மாப்பிள்ளை ஓட்டம்

ஸ்ரீ காளஹஸ்தி:

சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த ஒரு இளம்பெண் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் சித்தூர் மாவட்டம் கங்கவரம் மண்டலம் மிட்ட மீதகுரப் பள்ளியை சேர்ந்த கணேஷ் (25) என்பவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் சய்துகொள்ளலாம் என்று முடிவெடுத்து பெற்றோர்களிடமும் தெரிவித்தனர்.

ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணேசுக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் சொந்த கிராமத்திற்கு வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து கணேஷ் மீண்டார்.

அவருக்கு பெத்தபஞ்சானி மண்டலம் அப்பன பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்களது திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நடக்க இருந்தது.

இந்த நிலையில் கணேஷின் நண்பர்கள் மூலம் தகவல் அறிந்த அவரது காதலி பெங்களூருவில் இருந்து அவசர அவசரமாக மிட்டமீதகுரப் பள்ளிக்கு வந்தார். ஆனால் அதற்குள் கணேஷ் திருமணம் முடிந்து விட்டது. இதனால் கங்கவரம் மற்றும் பெத்தபஞ்சானி போலீசாருக்கு இளம்பெண் புகார் அளித்தார். மேலும் வெள்ளிக்கிழமை இரவு நடக்க இருந்த முதலிரவு நிகழ்ச்சியை தயார் செய்து கொண்டிருந்த நிலையில் அங்கு இளம்பெண் சென்றதோடு தன்னுடைய காதலனிடம் முறையிட முயற்சித்தார்.

ஆனால் கணேசின் உறவினர்கள் இளம்பெண்ணை தாக்கினர். இதுகுறித்தும் பெத்தபஞ்சானி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ததால் தங்களை பிரித்து விடுவார்களோ என பயந்து முதலிரவு அறையிலிருந்து புதுமண தம்பதியினர் ஓட்டம்பிடித்தனர்.

இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஏமாற்றிய கணேஷை கைது செய்ய வேண்டும் என்று கணேஷின் காதலி போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.