சிம்பு பட நடிகை சனா கான் திடீர் திருமணம்

சிம்பு பட நடிகை சனா கான் திடீர் திருமணம்

22 நவ, 2020 – 11:15 IST

சிம்பு நாயகனாக நடித்து 2008ம் ஆண்டில் வெளிவந்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சனா கான். அதன்பின் தமிழில் தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள சனா கான் ஹிந்தி பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று 2வது ரன்னர்-அப் ஆக வந்தார். சனா கானுக்கும், குஜராத்தைச் சேர்ந்த பிசினஸ்மேன் முப்டி அனாஸ் என்பவருக்கும் நேற்று சூரத் நகரில் திருமணம் நடைபெற்றுள்ளது. மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்களாம்.

சமீபத்தில் தான் சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகுவதாக சனா அறிவித்திருந்தார். சனாவுக்கும் மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனருக்கும் இடையே காதல் மலர்ந்து அதை 2019ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார்கள். ஆனால், இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். அதன்பின் இருவரும் சமூக வலைத்தளங்களில் கூட ஒருவருக்கொருவர் மறைமுகமாக தாக்கிக் கொண்டார்கள்.
சனாவின் திருமணம் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் மட்டுமே பரவியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.