டென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்

ஏ.டி.பி. இறுதிசுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில்  டொமினிக் தீம் (ஆஸ்திரியா), மெத்வதேவ் (ரஷியா) ஆகியோர் மோதினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை டொமினிக் தீம் 6-4 என வென்றார்.

ஆனாலும் இரண்டாவது செட்டில் மெத்வதேவ் அதிரடியாக ஆடினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாவது செட்டை மெத்வதேவ் 7-6 என தன்வசப்படுத்தினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். இறுதியில், டேனில் மெத்வதேவ் 4-6, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 3 வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.