டெலிகாம் கட்டண உயர்வு அவசியம், இல்லைன்னா அவ்வளவுதான் : ஏர்டெல் சுனில் மிட்டல்

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ஏற்கனவே சேவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் முக்கியமான விஷயத்தைத் தெரிவித்துள்ளார்.

தற்போது சந்தையில் இருக்கும் டெலிகாம் சேவைக்கான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. இந்தக் கட்டணம் மேலும் தொடர்ந்தால் டெலிகாம் துறையால் தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் தற்போதைய சந்தை சூழ்நிலைக்கும் கட்டண உயர்வு கட்டாயம் தேவை என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தக் கட்டண உயர்வைச் சந்தையில் இருக்கும் சக டெலிகாம் சேவை நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும். அதேபோல் டெலிகாம் கட்டுப்பாட்டு அமைப்பும் இந்தக் கட்டண உயர்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

21% வளர்ச்சியில் Gland பார்மா.. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..!

ஏர்டெல் சுனில் மிட்டல்

ஏர்டெல் சுனில் மிட்டல்

சுனில் மிட்டல் பதிலால் ஏற்கனவே முடிவு செய்ததைப் போல் ஏர்டெல் நிறுவனம் முதலில் கட்டண உயர்வை அறிவிக்குமா என்ற கேள்விக்குச் சுனில் மிட்டல் சந்தை நிலவரத்தைப் பொருத்து தான் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் திட்டம்

ஏர்டெல் திட்டம்

சுனில் மிட்டல் ஆகஸ்ட் மாதம் 16 ஜியோ டேட்டாவை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யும் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் மூலம் கிடைக்கும் சாரசரி வருமானத்தின் (ARPU) அளவு 200 ரூபாயாகவும், அதைத் தொடர்ந்து 300 ரூபாய் வரையில் உயர்த்தவும் முடியும் எனத் திட்ட வடிவத்தை அறிமுகம் செய்தது.

ஜியோ
 

ஜியோ

ஆனால் சந்தையில் ஜியோவின் கட்டணம் பெரிய அளவில் ஆதிக்கம் செய்யும் காரணத்தால் ஏர்டெல் தனது கட்டண முறையை அமல்படுத்தவில்லை. தற்போது தனது ஏர்டெல் தளத்தில் 12 ஜிபி டேட்டாவை 98 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.

வருமானம்

வருமானம்

மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு செப்டம்பர் காலாண்டில் 162 ரூபாயாக உயர்ந்துள்ளது, ஜூன் காலாண்டில் இதன் அளவு 157 ரூபாயாக இருந்தது. இதுவே கடந்த நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU அளவு 128 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிக முதலீடு சேவை

அதிக முதலீடு சேவை

கட்டண உயர்வு குறித்த பேசிய சுனில் மிட்டல், ‘டெலிகாம் துறை அதிக முதலீடு தேவைப்படும் ஒரு முக்கியமான துறை நெட்வொர்க், ஸ்பெக்ட்ரம், டவர் மற்றும் டெக்னாலஜி என அனைத்து பிரிவுக்கும் அதிகளவிலான நிதி தொடர்ந்து தேவைப்படுகிறது. இதனால் டெலிகாம் துறை நிலையாக இருக்க வேண்டும் என்றால் அதிக வருமானம் தேவை எனத் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

ஒவ்வொரு வருடமும் அதிகக் கவரேஜ், அதிகச் சேவை அளிப்பதற்குப் புதிய தொழில்நுட்பத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் பல பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரசு இந்தியாவை, டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற வேண்டும் என்றும், அனைத்து மக்களும் இணைந்திருக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டி உள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதேவேளையில் இந்தியாவிற்கு 5ஜி கட்டாயம் தேவை, அதற்கான திட்டமிடல் கண்டிப்பாக அவசியம். ஆனால் உலக நாடுகளில் 5ஜி பயன்படுத்தும் பல நாடுகள் மிகவும் மிதமான வேகத்திலேயே 5ஜி டெலிகாம் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் இந்திய எந்த விதத்திலும் பின்தங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் சுனில்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.