டெல்லி விரைந்தார் அமித் ஷா ! தமிழக பயணம் நிறைவு !!

உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு சற்று முன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

அகில இந்திய பாஜகவின் முன்னாள் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். 

அவரது இந்த பயணத்தில் மத்திய , மாநில அரசுகள் சார்பில் பல கோடி ரூபாய் திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார்.  பின்னர், தமிழக பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து பாஜக. உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில் அமித் ஷா தனது பயணத்தை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் அவர் சற்றுமுன் டெல்லி புறப்பட்டு சென்றார். அமித் ஷாவின் வருகை பாஜகவிற்கு தேர்தல் வெற்றி கதவை திறந்துவிட்டுள்ளது என பாஜகவினர் கருத்து தெரிவித்துள்ளனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.