தமிழகத்தில் இதுவரை 7.43 லட்சம் பேர் குணமடைந்தனர்

சென்னை, நவ.22-

தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 1,010 ஆண்கள், 653 பெண்கள் என மொத்தம் 1,663 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 4,64,227 பேர். பெண்கள் 3,04,080 பேர். மூன்றாம் பாலினத்தவர் 33 பேர் அடங்குவர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 586 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 3,808 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 133 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் 50-க்கும் குறைவானவர்களே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் 67 அரசு ஆய்வகங்கள், 150 தனியார் ஆய்வகங்கள் என 217 ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 11 லட்சத்து 84 ஆயிரத்து 919 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று புதிதாக 68 ஆயிரத்து 479 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.