தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நிறைவு.! நாளை வாக்கு எண்ணிக்கை.!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நிறைவு பெற்றது. மொத்தமுள்ள 1303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தேர்தல் சென்னை அடையாறிலுள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இத்தேர்தலில், டி.ராஜேந்தர் தலைமையிலான அணி, தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி, தேனப்பன் தலைமையிலான அணி என 3 அணிகள் போட்டியிட்டன.

மேலும், நடிகர்கள் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், சமுத்திரகனி, சரத்குமார், கருணாஸ், எஸ்.வி.சேகர், நடிகைகள் குஷ்பு, ராதிகா சரத்குமார் ஆகியோரும் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தினர்.

வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர் அடையாள அட்டை இல்லாமல் வருபவர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே, வாக்காளர்களுக்கு தங்க காசு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் திடீரென கோஷங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மொத்தமுள்ள 1303 வாக்குகளில் 1050 வாக்குகள் பதிவாகின. வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசாணை அரசு வெளியிட்ட பின்னர் தான் புதிய நிர்வாகிகள் குழு அதிகாரத்திற்கு வரமுடியும் என தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வாக்களித்த அனைவருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.